களப்போராளி 'கோவை கு.இராமகிருட்டிணன்'


களப்போராளி 'கோவை கு.இராமகிருட்டிணன்' 

- கதிரவன்

தந்தை பெரியார் முன்னெடுத்த அனைத்துப் போராட்டங்களுக்கும் அவருக்கு பக்கத் துணையாக பெரும் இளைஞர் பட்டாளம் இருந்தது. ஒரு போராட்டமோ அல்லது வேண்டுகோளோ தன் தோழர்களிடம் அறிவித்தால் போதும்,  செய்து முடிக்க ஒரு பெரும் கூட்டம் காத்திருக்கும். அப்படிப்பட்ட இளைஞர் கூட்டம் தான் பெரியாரின் அரை நூற்றாண்டு பொது வாழ்க்கைக்கு உந்து சக்தியாக செயலாற்றியது.

 

பெரியார் 1943-44 கால கட்டத்தில் போலி தமிழிசை மாநாட்டையோ அல்லது கிருபானந்த வாரியாரின் ஆன்மீகச் சொற்பொழிவுயோ பகிஷ்கரியுங்கள் என்று அறிவித்தாலே போதும், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் சுயமரியாதை இயக்க இளைஞர்களின் எதிர்ப்பை அந்த நிகழ்வுகள் சந்திக்கும்.

 

மா.பொ.சி. எழுதிய 'விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறுஎன்கிற புத்தகத்தில் ஒரு தகவலைச் சொல்வார், "பிராமணர்கள் முன் நின்று இறை வழிபாட்டுடன் நடத்திய 'தமிழ் அன்பர்' மாநாட்டில் சுயமரியாதை இளைஞர்கள் கலந்து கொண்டு குழப்பம் விளைவித்தனர். உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் அன்பர் தானா என்று எதிர்ப்பாளர்கள் வினா எழுப்பினர். மாநாட்டின் தொடக்கத்திலேயே குழப்பம் தொடங்கிவிட்டது. அத்தோடு இதுபோன்ற மாநாட்டில் குழப்பம் நடப்பது வாடிக்கையாகி விட்டது. அதேபோல சுயமரியாதைக்காரர்களால் கலைந்த போன மாநாடுகள் ஏராளமாகும்’ என்பார்.

 

பெரியாருக்குத் துணையாக இளைஞர்களும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக பெரியாரும் இருந்ததால் இச்சமூகத்தில் நடக்கும் அனைத்து கேடுகளையும் தட்டிக்கேட்கும் பொதுநலம் இருந்தது. பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட தோழர்கள்  துணிவுடன் அவற்றை அன்று  எதிர்கொண்டார்கள் இன்றும் எதிர்கொள்கிறார்கள்.

 

பெரியார் மறைந்து அரை நூற்றாண்டு ஆகப்போகும் இந்தச் சூழலிலும்  பெரியார் வழியில், பெரியாரின் கொள்கையை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு  சமூகத்தில் நடக்கும் அநீதிக்கு எதிராக  சாதியக் கொடுமைகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பதோடு களச் செயல்பாட்டில்  முக்கிய பங்காற்றுகிறார் மரியாதைக்குரிய  அண்ணன் கோவை‌.கு‌.ராமகிருட்டிணன் அவர்கள்.

 

மேற்கு மாவட்ட பகுதியில் அண்ணனின் களச் செயல்பாடு மிகுதியாக இருந்தாலும் 'தந்தை பெரியார் திராவிடர் கழகம்' அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் நடக்கும்  சாதிய ரீதியான ஒடுக்குமுறை, வன்முறை, வன்கொடுமைகளைக் கண்டித்து குரல் கொடுப்பதோடு போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றும்  வலதுசாரி இந்துத்துவ வெறுப்புப் பிரச்சாரத்தை எதிர்த்தும் களம் காண்பவர் கு.ரா.

 




 

இளமைக் காலம்

 

அண்ணன் கோவை கு.இராமகிருட்டிணன் தந்தை பெரியாரால் கோவை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டவர். போராட்டக் குணம் மிக்கவர். ‘இளைஞர்களின் இயந்திரத் துப்பாக்கி’யென கருஞ்சட்டைத் தோழர்களால் அழைக்கப்பட்ட, தமிழகம் அறிந்த திராவிடர் இயக்கப் போராளி.

 

இவரது தந்தை குப்புசாமி பிரபலமான காங்கிரஸ்காரர். செல்வமும் செல்வாக்கும் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம்வயதிலேயே பெரியாரின் இயக்கங்களாலும் கருத்துகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்ட கு.இராமகிருட்டிணன் வெறும் பார்வையாளராக மட்டுமல்லாது தானும் பெரியார் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளை மேற்கொண்டார். இயக்கம் நடத்தினார்; பெரியாரின் அறைகூவல்களுக்கு அணி சேர்த்தார்; இடைவிடாது இயங்கினார்; இவரது இயக்கங்களும் செயல்பாடுகளும் திராவிடர் கழகத்துக்கு வலு சேர்த்தது. திராவிடர் கழகத்தின் அன்றைய கோவை மாவட்டத்தின் முன்னணித் தலைவர்களுடன் தொடர்பும் உறவும் ஏற்பட்டது. .

 

பெரியார் அவர்கள் கோவை பயணங்களின் போது இரத்தினசபாபதி புரத்தில் (ஆர்.எஸ்.புரம்) இருந்த கோவை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் கஸ்தூரி வீட்டில் தங்கியிருந்து கழகப் பணிகளை கவனிப்பது வழக்கம். அப்போதெல்லாம் ஆர்வத்தோடு அய்யாவைச் சந்தித்து அவரது அனுமதியோடு கொள்கைப் பரப்புப் பணிகளையாற்றுவார். அச் செயல்பாடுகளே கு.இராமகிருட்டிணனின் கொள்கைப் பற்றையும் ஆற்றலையும் அனைவரும் அறியச் செய்தது.

 

திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டப் பிறகு கழகப் பணிகளில் மேலும் தீவிரம் காட்டினார். நாடெங்கும் நடந்த கழக நிகழ்ச்சிகள், போராட்டங்கள், மாநில மாநாடுகளை சிறந்த முறையில் நடத்துவதில் முனைப்புடன் செயலாற்றினார். பெரியார் சொன்னது போல சொந்தக் காசைச் செலவு செய்து தான் பொதுத் தொண்டைச் செய்து வந்தார்.

 

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் ஈழப் போராட்டத்திற்காகவும் கு.ரா. ஆற்றிய பணிகள்

 

1980களில் இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. தமிழர்களின் உயிர்களும் உடைமைகளும் பறிபோயின.தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கலவரம் பெரிய கொந்தளிப்பை உருவாக்கியது. தமிழகம் எங்கும் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர். இளைஞர்களும் மாணவர்களும் வெகு மக்களும் வெகுண்டெழுந்தனர்.

 

இலங்கைக்கு எதிராக உலகத் தமிழ் மக்கள்அனைவரும் போராடினர். பேரதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளான திராவிட இயக்கங்களும் போராட்டக் களத்தில் குதித்தன.

 

கோவை வந்த ஈழப் போராளிகளுக்கு வேண்டியதனைத்தையும் கு.ரா. செய்து கொடுத்தார். விடுதலைப் புலிகளை ஆதரித்தார். அவர்களோடு இணைந்து பணியாற்றவிடுதலைப் புலிகள் தோழமைக் கழக’த்தை உருவாக்கினார்.

 

விடுதலைப் புலிகளின் முதலாம் படையணி அவரது தோட்டத்தில் பயிற்சி எடுத்தனர். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிங்களப் பேரினவாதிகளால் ஈழத்தமிழர் படும் துயரங்களை மக்கள் அறியும் வண்ணம் கண்காட்சியாக நடத்தினார். இதன் விளைவாக இன உணர்வுமிக்க ஏராளமான இளைஞர்கள் இவரது தலைமையையேற்று கருஞ்சட்டை வீரர்களாயினர்.

 

இயல்பிலேயே தமிழ் உணர்வும் தமிழர்களின் மீது அக்கறை உள்ள கு.இரா. தமிழர்கள் ஈழத்தில் இனப்படுகொலைக்கு ஆளாகும் போதெல்லாம் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களையும், பொது மக்களையும் ஒருங்கிணைத்து ரயில் மறியல், மண்டை ஓட்டு ஊர்வலம், காயக்கட்டுப் பேரணி போன்றவற்றை நடத்தி அன்றே புலிகளையும், ஈழ விடுதலையையும் மக்கள் மயமாக்கிவிடுவார். அதில் பெரும் பங்கு வகித்தவர், அவரது உற்ற தோழர் வெ.ஆறுச்சாமி.இந்திய அமைதிப்படையோடு புலிகள் போரிட்டுக் கொண்டிருக்கும் போது, பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று 10.2.1990 அன்று வன்னி்க்காட்டிற்குப் பயணம் செய்தார்தமிழகம் திரும்பியதும் ஈழப் போராளிகளுக்குத் தேவையானவைகள் அனைத்தையும் அனுப்பி வைத்தார்.

 

சாதி ஒழிப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்த தோழர் கு.இராமகிருட்டிணன் தீவிர பெரியார் தொண்டர் வேலூர் நடராஜன் மகளான தோழர் வசந்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். அவரது தாயின் தலைமையில் ஒரு சில தோழர்களுடன் மிக எளிமையாக அத் திருமணம் நடந்தது.

இந்தியாவில் மிசா மற்றும் தடா ஆகிய இரண்டு கொடூரச் சட்டங்களாலும் கைது செய்யப்பட்டவர்கள் இருவரேஒருவர் கோவை.இராமகிருட்டிணன்இன்னொருவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள். 

ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் சாமியார்களின் மந்திர தந்திர மூட நம்பிக்கை நிகழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். அரசு வளாகங்களுக்குள் மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு எதிராக அரசு அதிகாரிகள் தொடங்கிய கோவில் பணிகளைத் தடுத்து நிறுத்தியதோடு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வந்த மதம் சார்ந்த சடங்குகள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டார்.

 

கல்வி நிலையங்கள், தொடர்வண்டித் துறை, நெடுஞ்சாலைத் துறை, அரசு அலுவலகங்கள், ஏனைய பொதுத்துறை நிறுவனங்களில் இவர் ஒன்றிய அரசால் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து நடத்திய போராட்டங்களால் எந்த வடிவிலும் இந்தி மொழி நுழைய முடியாமல் விழிக்கிறது.

 

இந்தியாவில் மிசா மற்றும் தடா ஆகிய இரண்டு கொடூரச் சட்டங்களாலும் கைது செய்யப்பட்டவர்கள் இருவரே. ஒருவர் கோவை.இராமகிருட்டிணன், இன்னொருவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்.

1976 ஆம் ஆண்டு தி.மு.. ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது அவசர நிலை (Emergency) அமலில் இருந்த காலத்தில் தனித் தமிழ்நாடு தான் ஒரே தீர்வு எனப் பேசிய காரணத்தால்மிசாசட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் இருந்தவர்.

 

1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலையை அடுத்து, கோவையில் வெடிகுண்டு தயாரித்ததாக அவர் மீது பொய் வழக்கு ஒன்றை தடா சட்டத்தின் கீழ் போட்டுஆண்டுகள் சிறையில் வைத்தது அரசு. ஆனால்ஆண்டுகள் கழித்து அவரை நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறி விடுதலை செய்தது.

 

ஒரு ராணுவத்துடன் அதன் எதிரி ராணுவம் மோதும். அல்லது ஆயுதமேந்திய போராளிக் குழுக்கள் மோதும். ஆனால் இந்திய வரலாற்றில் சிவிலியன்கள் என்று சொல்லப்படும் பொது மக்கள் ராணுவத்தை எதிர்கொண்டு தாக்குதல் நடத்தியது அது தான் முதல்முறையாக இருக்கும்!

 


ஆம்! விடுதலைப்புலிகளையும் ஈழத் தமிழர்களையும் அழித்தொழிக்க பார்ப்பனிய இந்திய அரசு, இலங்கைக்கு ஆயுதங்களைக் கோவை வழியாக கொச்சின் சென்று இலங்கைக்குக் கொண்டு செல்கிறது என்ற தகவலறிந்த கு.ராமகிருட்டிணன் பல்வேறு அமைப்புகளைத் திரட்டி, ஆயுதங்களைச் சுமந்து சென்ற 70க்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்களைக் கோவை நீலாம்பூர் பைப்பாஸ் சாலையில் தடுத்து நிறுத்தினார்.

 

அதிலிருந்த ஆயதத் தளவாடங்களைக் கண்ட கோபமுற்ற தோழர்கள் அவற்றை அடித்து உடைத்தனர்.இந்திய இராணுவத்தினருக்கும், தோழர்களுக்கும் பெரும் மோதல் போக்கு உண்டாகி, பின்னர் தகவலறிந்து சினத்துடன் வந்த ராணுவத்தினர் தாக்க முற்பட   அவர்களிடம் இருந்து காவல்துறையினர் கு.ரா.வைக் காப்பாற்றினர்2009ல் ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது தமிழர்களிடம் இருந்து வந்த எதிர் வினையில் மிக முக்கியமானதாக இந்தத் தாக்குதல் வரலாற்றில் இடம்பெற்றது.

 

இத் தாக்குதலுக்கு காரணமானவர் எனக் கூறி கு.ராமகிருட்டிணன் 3 மாதங்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் தேசியப் பாதுகாப்புச் சட்டம் ரத்தாகி விடுதலை செய்யப்பட்டார்.

 

இரட்டைக் குவளைகள், இரட்டைச் சுடுகாடுகள், தாழ்த்தப் பட்டோரை அனுமதிக்க மறுக்கும் மண்டபங்கள், கோவில்கள், முடி திருத்தகங்கள், உணவகங்கள் என கோவை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மீது நிலவிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிச் சிலவற்றில் தீர்வையும் கண்டார்.

அண்ணன் கு.ரா. தன் அமைப்பு மூலம் ‘பக்தர்களுக்கு 100 கேள்விகள்’ என்ற புத்தகம் தொடங்கிஇதுவரை எந்தப் பதிப்புகமும்அமைப்பும் செய்திராத அரிய பணியாக ஒரே தொகுப்பில் 100 திராவிடர் இயக்க நூல்களை வெளியிட்டார்.

 

பெரியாரின் பெரும் பணிகளில் மற்றொரு முக்கியப் பணியான அச்சுப் பணியிலும் தன்னாலான பங்களிப்பை வழங்கி வருகிறார். அண்ணன் கு.ரா. தன் அமைப்பு மூலம்பக்தர்களுக்கு 100 கேள்விகள்’ என்ற புத்தகம் தொடங்கி, இதுவரை எந்தப் பதிப்புகமும், அமைப்பும் செய்திராத அரிய பணியாக ஒரே தொகுப்பில் 100 திராவிடர் இயக்க நூல்களை வெளியிட்டார். அதே போல் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட எரிப்பு 1957 வரலாற்றை முழுமையாகப் பதிவு செய்த புத்தகமும், விரைவில் வெளிவரவிருக்கும்  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகரான வரலாறும் புத்தகங்களும் அவருடைய அச்சுப் பணிகளில் அடங்கும்.

 

அரை நூற்றாண்டு காலப் பொதுவாழ்வில் ஏராளமான செயல்பாடுகள் இருந்தாலும் அண்ணனின் வழிக்காட்டுதலில் நடந்த, கடந்த ஓராண்டில் வெளியில் தெரிந்த ஒரு சில செயல்பாடுகளைப் பார்ப்போம்.

 

சென்னை அய்.அய்.டி., பார்ப்பன பல்கலைக் கழகமாக செயல்படுவது நம் அனைவருக்கும் தெரிய்ம். பார்ப்பனரல்லாத மாணவர்கள் அங்கு சாதி ரீதியான ஒடுக்குமுறைக்கு தொடர்ச்சியாக ஆளாகுவதும் அன்றாடச் செய்தி.  ஆனால் அய்.அய்.டி. பேராசிரியர் ஒருவரே சாதி ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாகித் தன் பதவியை ராஜினாமா செய்த போது, அய்.அய்.டி.யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அமைப்பு அண்ணனின் அமைப்பு மட்டுமே.

 

2018இல் விநாயகர் சதுர்த்தியின் போது காவல் துறையை ஒருமையில் அநாகரிகமாகப் பேசியவர் பார்ப்பனத் திமிரும், ஒன்றிய அரசின் ஆதரவும் கொண்டவருமான ஹெச்.ராஜா.  மூன்றாண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்தவரை மதுரை உயர் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடுத்து நீதிபதியின் முன் நிறுத்தியது அண்ணனின் அமைப்பே‌.

 

மேட்டுப்பாளையம் அருகே தீண்டாமைச் சுவர் விழுந்து 17பேர் படுகொலை செய்யப்பட்ட போது தலித் அமைப்புகளோடுச் சேர்ந்து களத்தில் போராடியது, கடந்த மாதம் கோவை அருகே ஒருவரைக் காலில் விழ வைத்த  கிராம நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் இடம் கோரிக்கை வைத்து, அந்தச் சாதித் திமிர் பிடித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப் போராடியது எனப் பெரியார் வழியில் ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினை என்றால் முந்திக் களத்தில் நிற்பவர் கு.ரா.  ஒரு பக்கம் சக சூத்திர துரோகிகள், இன்னொரு பக்கம் ஆரிய எதிரிகள் எனத் தொடர்ந்து திராவிடர் இயக்கங்கள் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டே இருந்தாலும், தமிழர் உரிமை காக்கும் போராட்டத்தில் இன்றுவரை தளராது களமாடுவதே அண்ணனின் வாழ்வியல் பணியாகத் தொடர்கிறது.

 

 வெங்காயம் செப்டம்பர் 2021

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Post a Comment

Previous Post Next Post