' இந்து தமிழ் திசை' நாளிதழ் தன் பார்ப்பனிய வெறித் தனத்தை வெளிப்படுத்தி உள்ளது.
-இக்லாஸ் உசேன்
'இந்து தமிழ் திசை' நாளிதழின் கடைசிப் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
ராஷி பாண்டே என்ற மாணவி "நான் பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவி, எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது. நான் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன். அண்மையில் நான் எழுதிய கல்லூரி நுழைவுத்தேர்வில் (கல்லூரியின் பெயரை குறிப்பிட வில்லை ) 97 சதவீத மதிப்பெண்களைப் பெற்றேன். இருந்தபோதும் கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நான் பொதுப் பிரிவைச் சேர்ந்தவள். அதே நேரத்தில் என்னுடைய வகுப்பைச் சேர்ந்த சக மாணவன் 60 சதவீத மதிப்பெண்களை மட்டுமே பெற்றார் அவருக்கு கல்லூரியில் இடம் பெற்றுள்ளார் அவர் வசதி படைத்த குடும்பத்திலிருந்து வந்தவர்'' என சொல்லியுள்ளார்.
அதாவது எனக்கு தகுதி இருந்தும்
இந்த இட ஒதுக்கீடு முறையால் எனக்கு கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே அந்த உயர்சாதி பெண்ணின் குற்றச்சாட்டு.
1950-களில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பமே செய்யாத செண்பகம் துரைராஜன் என்ற மாணவர்
இட ஒதுக்கீட்டால் எனது மருத்துவ படிப்பு பாதித்துள்ளது ஆகையால்
எனக்கு நீதி வேண்டும் என நீதிமன்றத்தில் கேட்டவுடன், இட ஒதுக்கீடு முறையே ரத்துசெய்த கூத்து நடந்தது போல் ஒரு மாணவி பதிவு செய்தவுடன் அதை உடனே
செய்தியாக்கி அந்த விசயத்தை
தமிழகமெங்கும் விதைத்துள்ளது
‘தமிழ் இந்து’ நாளிதழ்.
கல்லூரியில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்ட அந்த மாணவி தற்போது இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்(IIM) என்ற உயர்கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறார்.
அவர் தற்போது படித்துவரும் கல்லூரியில் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் எத்தனை சதவீதம் படிக்கிறார்கள் என்ற விவரம் ஓரளவு அறிந்தாலே இப்படி ஒரு கேவலமான பதிவைப் போட வேண்டும் என்ற நிலை அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டு இருக்காது.
ஒருவேளை கல்வி என்பது ஒரு சாரார் மட்டுமே படிக்க வேண்டும் என்ற கேவலமான கருத்து தன் மனதில் நிறைந்து இருந்தால்
மட்டுமே இப்படி ஒரு பதிவு போடத் தூண்டும்.
பொதுவாக இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் அல்ல, அது சமூக நீதி அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதாவது ஜாதி அடிப்படையில் உழைக்கும் மக்களுக்கு கல்வியை மறுக்கப்பட்டு கல்வியை அனுபவிக்க ஒரு ஜாதி கூட்டத்துக்கு மட்டுமே அனுமதி உண்டு என்ற இழிவான நடைமுறையை ஒழித்து, இங்கு மதத்தின் பெயரால், சனாதனத்தின் பெயரால் கல்வி எப்படி மறுக்கப்பட்டதோ அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கான மறுக்கப்பட்ட வாய்ப்பை மீண்டும் உருவாக்கிக் கொடுப்பதுதான் இட ஒதுக்கீட்டீன் மய்ய நோக்கம்.
இட ஒதுக்கீடு ஜாதிப் பிரிவு இல்லாமல் பொருளாதார அடிப்படையில் வைக்க அந்த பெண் போல் பல யோக்கியர்கள் போலி ஒப்பாரி வைக்கிறார்கள் . அப்படி பொருளாதார அடிப்படையில் வைத்தால் அது ஆமைக்கும் முயலுக்கும் நடக்கும் ஓட்டப்பந்தயப் போட்டி வைத்தது போல் ஆகிவிடும்.
அதாவது ஐந்து தலைமுறையாக படித்து வரும் குடும்பத்திலிருந்து வந்த மாணவருக்கும் படிப்பு வாசமே அறியாத குடும்பத்தில் இருந்து வரும் மாணவரும் ஒரு தேர்வில் போட்டி போட்டால் நிச்சயம் அது ஆமைக்கும் முயலுக்கும் நடக்கும் ஓட்டப் பந்தயம் போல்தான் அதன் முடிவு இருக்கும்.
இந்த இட ஒதுக்கீடு என்ற இடப் பங்கிடும் முறை என்ன செய்கிறது என்றால் முயலுக்கும் முயலுக்குமான போட்டி வைக்கிறது அடுத்து ஆமைக்கும் ஆமைக்குமான போட்டித் தேர்வு வைக்கிறது.
அதாவது நான் 97 விழுக்காடு மார்க் எடுத்து எனக்கு சீட் கிடைக்க வில்லை என்று சொல்லிய பெண் தன்னை உயர்சாதி என சொல்கிறது அந்த பெண் பொதுப் பிரிவில் வருவார், அந்த பெண்னை ஒரு முயல் போல் வைத்துக் கொள்ளலாம் , மற்ற உயர் சாதி மாணவர்களையும் முயலாக வைத்துக் கொள்ளலாம்.
இதில் முயலுக்கும் முயலுக்குமான ஓட்டப்பந்தயம் போல
ராணி பாண்டே எனும் முயல் 97 மார்க் எடுத்தாலும் அதனோடு போட்டி போட்ட மற்ற முயல் 97க்கு மேல் மார்க் எடுத்துள்ளதால் ராணி பாண்டே வுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும் தவிர,
அதற்கு ஆமை போல் உள்ள பிற்படுத்தப்பட்ட - பட்டியலின இட ஒதுக்கீடு காரணம் அல்ல.
பொதுவாக கல்லூரித் தேர்வில் இட ஒதுக்கீடு முறை என்பது பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவுகளில் இட ஒதுக்கீடு முறை உள்ளது.
உதாரணமாக பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் இந்தாண்டு cut-off பொதுப் பிரிவுக்கு 85மார்க்
பட்டியலின பிரிவுக்கு 70 மார்க், மாற்றுத் திறனாளிகளுக்கு 50 மார்க்
என்று நிர்னயித்து உள்ளார்கள்.
இட ஒதுக்கீடு முறையில் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மாணவர்கள் பொதுப்பிரிவில் உள்ள மார்க் உள்ள cut-off 85-க்கு மேல் எடுத்தாலும் அந்த மாணவனை பொதுப் பிரிவில் எடுக்காமல் பட்டியலின பிரிவில் தான் கல்லூரியில் சேர்க்கப்படுகிறது.
அதன்படி உயர்கல்வி நிறுவனம் முழுக்க உயர்சாதிக் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது, 15-விழுக்காடு பட்டியலின பிரிவு மற்றும் 27-விழுக்காடு பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள இட ஒதுக்கீடுகள் ஒரு முறைகூட முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டது இல்லை.
1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இட ஒதுக்கீடு முறை
பட்டியலின மக்களுக்கு இருந்து வந்தாலும் அவர்களை அரசு உயர்பதவிகள் அனைத்திலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தான் என்றும் இருந்து வருகிறார்கள்.
மேற்சொன்ன இட ஒதுக்கீடு முறை அனைத்தும் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் எந்தவித ஆதாரமும் தரவுகளும் இல்லாத ஒரு செய்தியை
தனது இதழில் கடைசி பக்கத்தில்
அதாவது எல்லோரும் முதலில் வாசிக்கும் பக்கத்தில் கொண்டு வருவதில்தான் பார்ப்பனியச் சூழ்ச்சி இருக்கிறது.
ஒன்றிய அரசு பணி முழுக்க முழுக்க உயர் ஜாதிக் காரர்கள் ஆதிக்கத்தில் மட்டுமே இருந்து வந்ததை தகர்க்கும் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப் படுத்தியவர்.
இந்தியாவில் சரி பாதியாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அனைவருக்கும் ஆண்ட ஜாதி என்ற அடைமொழி கொடுத்து எந்தவித அதிகாரம் அற்ற மக்களாய் வாழ்ந்து வந்த நிலையை மாற்றிய சட்டத்தை சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் கொண்டு வந்தார்.
அப்படி அவர் கொண்டுவந்த ஒற்றைச் சட்டம்தான் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த ஊடகங்களும் அவருக்கு எதிராக திரும்பின.
ஒரு சில கட்சியைத் தவிர்த்து
மொத்த எதிர்ப்பையும் வி.பி.சிங்கின் மீது அன்றைக்கு ஊடகம் திருப்பியது.
மண்டல் குழு சட்டமானதை எதிர்த்து கோஸ்வாமி என்ற உயர்ஜாதி மாணவன் தீக்குளித்ததால் அது கல்லூரி மாணவர்களின் போராட்டமாக கட்டமைக்கப்பட்டது.
அந்தப் போராட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கலந்து கொள்ளும் அவலமும் நடந்தேறியது.
அதாவது, 2016-இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி செயற்கையாக நடத்தினார்களோ அதேபோல் அன்று வி.பி.சிங்கிற்கு எதிரான போராட்டம் வெற்றிகரமாக
நடத்தி அவரின் அரசியல் எழுச்சியடையால் ஊடகமும் பார்ப்பனியமும் பார்த்துக்கொண்டு.
அவர் மீதான வெறுப்பை எப்போதும் ஏவிவிடும் வேலை செய்து வந்தார்கள். ரத்தப் புற்றுநோய், கிட்னி பிரச்சினையால் தொடர்ந்து சிகிச்சை பெற்று 2008-இல் காலமானார்.
வி.பி.சிங் மறைந்தது, அவரைத் தீயிட்டு அடக்கம் செய்தபோது, 'ராஜுவ் கோஸ்வாமி தன்னைத்தானே கொளுத்திக்கொண்டு எரிந்த தீயின் மிச்சமே இன்று எரிகிறது' என 'இந்தியா டுடே' இதழ் எழுதியது.
எப்போதெல்லாம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கருத்துகள் சமூக தளத்தில் வருகிறதோ அதை உடனடியாக செய்தியாக்கி சுயலாபம் அடைவதில் பார்ப்பனிய ஊடகங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து செயல்படுகின்றன.
-இக்லாஸ் உசேன்
சிறப்பான பதிவு தோழர்
ReplyDeletePost a Comment