1914இல் முதலாம் உலகப்போர் தொடங்கிய போது அமெரிக்கா அரசு அய்ரோப்பியா நாடுகளிடம் 500 கோடி டாலர், கடனாளியாக இருந்தது. அய்ரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று போர் செய்துகொண்டு இருந்த அந்தச் சூழலில் அவர்களின் யுத்தத்திற்கு தேவையான உணவும் தேவையான பொருட்களை அனுப்பியது அமெரிக்கா.
1917இல் உலகப்போர் முடிந்த போது 'கிரேட்' பிரிட்டன் அரசின் கடன் 650கோடி டாலர், அமெரிக்க அரசோ தன் கடனெல்லாம் அடைத்துவிட்டு ஐரோப்ப நாடுகளுக்கு ஆயிரம் கோடி டாலர் கடன் கொடுத்து இருந்தது.
முதலாம் உலகப்போர் அய்ரோப்பியாவை கடனாளியாகவும், அமெரிக்காவை வல்லாரசாகவும் மாற்றி இருந்தது.
உலகப்போரால் சிதைக்கப்பட்ட அய்ரோப்பா மீண்டு எழுவதற்கு 10ஆண்டுகள் பிடித்தன, அந்த பத்தாண்டுகளின் அமெரிக்காவே உலகப் பெருளாதாரத்தின் தலைவனாக இருந்து.
1928இல் உலகம் முழுக்க உள்ள நாடுகள் பொருளாதாரத்தில் சீராக மீண்டதால் அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தம் ஏற்ப்பட்டது அதாவது 1928ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டில் அமெரிக்கா, பிற நாடுகளுக்கு 105கோடி டாலர் கடன் கொடுத்துருந்தது ஆனால் 1928இல் இரண்டாவது அரையாண்டில் அது 45கோடி டாலராக சரிந்தது.
அத்தோடு 1929இல் இரண்டாம் அரையாண்டில் மேலும் சுருங்கி 29கோடி டாலராக இறங்கியது.
இதனால் அமெரிக்கா முதலீடும் உற்பத்தியும் உலகம் முழுக்க குறைந்த தால், அது அமெரிக்க பங்கு சந்தையில் எதிரொலித்தது 24.1.1929 அன்று அமெரிக்க பங்கு சந்தையில் 12,894,650 பங்குகள் அதாவது கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி பங்குகள் ஒரேநாளில் விற்கப்பட்டு அமெரிக்க பெருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் ஏறப்பட்ட இந்த பொருளாதார மந்தம் அமெரிக்கர்களை ரொட்டிக்கு அலையவிட்டது. இந்த மந்தம் உலகம் முழுக்க எதிரொலித்தது ஒவ்வொரு நாடும் இதன் பாதிப்பை சந்தித்தது. அதில் நம்முடைய மதராஸ் மாகாணம் என்கிற தமிழ்நாடும் அடங்கும்.
மதராஸ் மாகாண பொருளாதார பாதிப்பென்பது அட்டைப்பூச்சி ரத்தத்தை உரிவது போல் இம்மக்களுக்கு தெரியாமலே நடந்தன.
சென்னையின் கடல்வழி இறக்குமதி 1929இல் இருந்ததை விட 1936/37இல் சரி பாதியாக குறைந்து. அதேபோல ஏற்றுமதியும் இதே காலகட்டத்தில் 40விழுக்காடு குறைந்தது.
ஏற்றுமதி , இறக்குமதியில் ஏற்பட்ட பாதிப்பு 1930/31இல் வில்வாசியிலும் எதிரொலித்தது,
பருத்தி பொருட்கள் 30சதவீதம் விலை வீழ்ந்தும். ரப்பர் விலை 20விழுக்காடு விலை வீழ்ந்தும், விதைகள் விலை 42.3விழுக்காடு விலை வீழ்த்தும், புன்னாக்கு விலை 41விழுக்காடு விலை வீழ்ச்சியும் சந்தித்தது.
1929-30இல் 45 லட்ச ரூபாயாக இருந்த ஏற்றுமதிகளின் மதிப்பு 1934இல் 28லட்ச ரூபாயாக குறைந்தது.
ஏற்றுமதி மதிப்பு 37விழுக்காடும் இறக்குமதி மதிப்பு 51விழுக்காடும் குறைந்து.
1929 முதல் 1933வரை மதராஸில் இருந்து அரிசி ஒரு லட்சம் டன் வரை ஏற்றுமதி செய்யப்பட்டது ஆனால் 1934இல் 7லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டது அதாவது தேவைக்கு மீறி இறக்குமதி செய்யப்பட்டு தஞ்சை அரிசி வியாபாரிகளை விட விலை மலிவாக கொடுத்து தஞ்சை விவாசாயிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
பொருளாதார மந்தத்தை சரி செய்ய உலக நாடுகளிடையே சரியான புரிதலும் ஒற்றுமையும் இல்லாதலும் அனைத்து நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தையின் நிலைத்தன்மை இல்லாததாலும் பெருமந்த தாக்கம் நீடித்தது.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விலை மலிவாக இருந்தாலும் கிடைத்தவரை போதும் என்ற நிலைப்பாட்டில் விளைபொருட்களை விற்பதற்கு விவசாயிகளை பெருமந்தம் நிர்பந்தித்தது. பற்றாக்குறைக்கு தங்களின் நுகர்வு தேவைக்காக இது காலம் வரை சேமித்து வைத்திருந்த்த தங்கத்தை விற்பனை செய்தார்கள்.
1931இல் வாக்கில் தினசரி கிட்டத்தட்ட 1600 அவுன்ஸ் தங்கம் பெரும்பாலும் நகையாக மும்பைக்கு வந்து சேர்ந்தது. அன்றைய அரசு அறிவித்த விலையை விட சந்தை விலை குறைவாக இருந்ததால் மேற்படி தங்கத்தில் பெரும்பாலானவை அரசாங்க கருவூலத்திற்கு சென்றன. ஒரு மதிப்பீட்டின்படி 1931 ஆம் வருட ஆரம்பத்தில் மும்பை நாணயச் சாலையில் மாதாந்திர தங்க வருகை கிட்டத்தட்ட 10 லட்சம் பவுண்டாக இருந்தது பெருமந்தத்தின் போது ஏகாதிபத்தியம் கடைபிடித்த நானைய கொள்கையின் வெற்றி அதிகாரவர்க்க வருடத்தில் மகிழ்ச்சி அலையை எழுப்பியது. 1928 முதல் 1930வரையான காலகட்டத்தில் இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்த காலம் மாறி , 1931 முதல் 1937 வரை இங்கிருந்து தங்கம் ஏற்றுமதி ஆனது.
இதுபற்றி வைசிராய் வில்லிங்டன் சுய பாராட்டு குறிப்பு ஒன்றை எழுதினார் அதில் :
சரித்திரத்தில் முதல்முறையாக பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக இந்தியர்கள் தங்கள் தங்கத்தை கக்குகின்றன இந்த இரண்டு,மூன்று மாதங்களில் லண்டனுக்கு இரண்டரை கோடி ஸ்டெர்லிங் அனுப்பினோம் இந்த போக்கு தொடரும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
இந்தியாவிலிருந்து தங்கம் வெளியேற்றும் இங்கிலாந்து வங்கிக்கு நிவாரணத்தையும் நிம்மதியும் அளித்ததோடு தவிர்க்க முடியாத நிதித் தடுமாற்ற நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து இங்கிலாந்தை இந்திய விவசாயிகள் தங்கம் காபாற்றியது.
எங்கோ அமெரிக்காவில் ஏற்ப்பட்ட மந்தம் நம் மாநிலத்தின் பொருளாதாரத்தை எப்படி நசுக்கியதோ அதே நிலை கடந்தாண்டு ஏற்ப்பட்ட கொரோனா தாக்கமும் நமக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
பெருமந்தம் உருவான (அ) உருவாக்கப்பட்ட விதம்.
கடந்தாண்டு சனவரியில், சீனாவின் வூஹான் மகாணத்தில் கொரோனா தொற்றுப் வேகமாக பரவத் தொடங்கியதும், இங்கிருக்கும் பார்ப்பனிய நாளேடுகள்; சீனர்கள் அதிகமாக இறைச்சி உட்கொண்டானதால் தான் அங்கு கொரோனா பரவுகிறது ஆகையால் இந்தியர்கள் மரக்கறிக்கு மாறுங்கள் என்று தங்களுடைய விசக்கருத்தை பரப்புரை செய்துகொண்டு இருந்தன.
வூஹானில் கொரோனா பரவத்தொடங்கி கிட்டதட்ட மூன்றுமாதம் சீனாவில் இருந்து அய்ரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு விமானப்பயணம் நடைபெற்றது, சீனாவில் இருந்து கிட்டதட்ட 100க்கு மேற்ப்பட்ட முறை அமெரிக்காவுக்கு விமானம் சென்று வந்தது.
சீனாவில் தோன்றிய உயிரியல் அணுகுண்டை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் பணியை முதலாளித்துவ விமானங்கள் அன்றைக்கு செய்துவந்தது.
முதாளித்துவம் தங்களின் விமான சேவைக்கு தடை ஏற்படுத்தாததாலும்
முதலாளிகளுக்கான அரசாகவே உலக நாடுகள் அனைத்தும் இருந்தாலும் கொரோனா பற்றிய புரிதல் மருத்துவ உலகிற்க்கு புரியாததாலும் உலகெங்கும் கொரோனா பரவியது (அ) பரப்பப் பட்டது
இந்தியாவில் சனவரி மாதமே கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டும், தங்களின் அரசியல் சுயநலத்திற்காக சர்வதேச விமான சேவயை ரத்து செய்யாமல் அரசு மவுனம் காத்தது அதற்கு காரணம் பிப்ரவரி மாத இறுதியில் அன்றய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குஜராத் வந்து லட்சக்கணக்கானோர் மத்தியில் உரையாடும் வரை கொரோனா பற்றி ஏராளமான எச்சரிக்கை வந்தும் எதையும் காதில் வாங்காமல் வேடிக்கை பார்த்தது மோடி அரசு.
கொரோனா தொற்று வளர்ந்த நாடுகளிலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் வெவ்வேறு பாதிப்பை ஏற்படுத்தியது.
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை அடர்த்தியையும் அதற்கேற்ற மருத்துவ வசதியற்ற நாடான நம் நாட்டில் கொரோனா ஊரடங்கை அறிவித்தார் மோடி அவர்கள்.
நம் நாட்டின் 30விழுக்காடு மக்கள் (அ) 35கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் சூழலில் அம்மக்களுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் ஊரடங்கை அறிவித்தார்கள்.
இந்தியாவின் கொடூரமான சாதிய கட்டமைப்பும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அரசின் அலட்சியமும் ஒன்று சேர்ந்து கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் வேலையை ஊரட்ங்கில் பரிக்கப்பட்டு சாலையில் அந்த மக்களை நடக்கவைத்த கொடுமையான கொடூரம் நடக்க அதை இந்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த உலகமும் வேடிக்கை மட்டுமே பார்த்தது.
மக்களின் வேலைவாய்ப்பு முதல் சிறுதொழில் வரை அனைத்தையும் கொரோனா முடக்கி, முதலாம் கொரோனா அலை நாடு முழுக்க ஏற்படுத்திய தாக்கம் நாட்டின் மொத்த உற்பத்தியில் கால்பங்கு வீழ்ச்சியை கண்டது.
"நம்நாடு ஏழை நாடு அல்ல; அரசியல் லாபத்துக்காகவே, மக்கள் ஏழைகளாக வைக்கப்பட்டுள்ளனர். எனக்கு, 60 மாதங்கள் வாய்ப்பு கொடுங்கள்; மக்களுக்கு அமைதியான, மகிழ்ச்சியான, வறுமை இல்லாத வாழ்க்கையைத் தருவேன் என்று
2014 தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி" சொன்னார்
ஆனால் 2020,இல் இந்தியாவில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு, `பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம்' மூலம் இலவச உணவுப் பொருள்கள் வழங்க அறிவித்து இந்தியாவை தன் ஆட்சியை ஏழைகள் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றியமைத்தார்.
ஏழைகளை உற்பத்தி செய்தது போல் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களுக்கும் பணியை தன் அதிகாரத்தின் கீழ் உள்ள சட்டத்தின் மூலம் மோடிஜி ஆட்சி செய்தது வந்தது.
இந்த கொரோனாவால் மிகப்பெரிய வாழ்வாதார நெருக்கடியை சந்தித்தவர்கள் கோடிக்கணக்கான அமைப்புச்சார தொழிலார்களே. இவர்கள் பற்றி உண்மையான எந்தவித புள்ளிவிபரமும் இருக்காது, இவர்கள் தினசரி உழைத்து தான் அன்றாட வாழ்க்கையை நடத்துபவர்கள் இவர்கள் பெரும்பான்மையோரிடம் சேமிப்பு என்பதே இருக்காது.
அடுத்து மிடில்கிளாஸ் சமூகம் என்கிற நடுத்தர பொருளாதார வாழ்க்கை கொண்டவர்கள் தான் இந்தியாவின் பொரும்பான்மை மக்களாக இருக்கின்றனர். இவர்கள் கையில் தான் சிறுகுறு தொழில்கள் மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களின் ஊழியராக பணிபுரிபவர்கள் இருக்கிறார்கள். கொரோனா முதல் ஊரடங்கில் நேரடியாக மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு என்றால் அது இவர்களுக்கு தான், தொழில் செய்யும் கடைக்ளை மூடியதால் ஏற்பட்ட வருமான இழப்பு மற்றும் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் ஊழியரை வேலைவிட்டு விரட்டியது (அ) சம்பளக் குறைப்பை மேற்கொண்டது ஏராளமான சிக்கலை எதிர்கொண்டார்கள்.
இப்படி கொரோனா கோரதாண்டவம் 1930இல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தை போன்று பெரும் சிக்கலை எதிர்கொண்டது அதில் முதன்மையானது இத்தனையாண்டு காலம் சிறுக சிறுக வங்கியில் சேமித்த பணத்தை ஒரே ஆண்டில் 45விழுக்காடு சரிந்துள்ளதோடு இந்திய முழுக்க சுமார் 20கோடி குடும்பங்கள் கடனாளியாக ஆக்கியது. 2020ஜனவரியில் இந்தியர்களின் வைப்புநிதி நாலரை லட்சம் கோடியாக இருந்தது முதல் கொரோனா அலை முடிந்து ஜூன்,ஜூலையில் அது ஒன்றேகால் லட்சம் கோடியாக சரிந்தது.
வங்கி சேமிப்பு மட்டும் தான் சரிந்துள்ளாதா என்றால் இல்லை அதைவிட மேலான இந்திய மக்கள் சிறுக சிறுக சேமித்து வைத்துள்ள தங்கத்தையும் விற்றுள்ளார்கள். கிட்டதட்ட 215டன் தங்கம் சென்றாண்டு விற்பனைக்கு வந்துள்ளது. அதன் மதிப்பு கிட்டதட்ட ஒரு லட்சம் கோடி இருக்கும், மனப்புரம் நகை அடகுகடை என்ற தொடர் நிறுவனத்தில் மட்டும் சுமார் 400கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மக்கள் திரும்ப மீட்காமல் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
1930க்கு பிறகு மக்களிடம் இருந்த தங்கம் இந்த கொரோனா காலகட்டத்தில் தான் மார்கெட்டிற்கு வெளிவந்துள்ளது. அறைக்கு வெளிவந்த தங்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்தை, பிரிட்டிஷ் வங்கிகளை காப்பாற்றியது போல் இன்றைய தங்கம் இந்தியாவின் பெருமுதலாளின் செல்வத்தை மேலும் பெருக உதவி செய்துருக்கிறது.
இந்த கொரோனா மந்தம் வேலைவாய்ப்பு, சிறுதொழில், சேமிப்பையும் சேர்ந்து கல்வியையும் சிதைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு மட்டும் தனியார் கல்விக்கூடத்தில் படித்த மாணவர்கள் 75 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளார்கள் அதேபோல அரசு கலைக்கல்லூரியில் சேருவதற்கு ஆண்டுக்கு வழக்கமாக ஆண்டுக்கு 25ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பிப்பார்கள். ஆனால் இந்தாண்டு 1லட்சத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்வது ஒருபுறம் மகிழ்ச்சி தான் என்றாலும் இந்த மாணவர்களை அரசு பள்ளியை நோக்கி நகர்த்தியது முழுக்க கோரோனா தொற்றால் ஏற்ப்பட்ட வேலையிழப்பும் பொருளாதார இழப்பும் மட்டுமே என்பதை எந்த அரசும் ஆராய்ந்து பார்க்க தயாராக இல்லை.
1930இல் ஏற்ப்பட்ட பெருந்தமும் தற்போது ஏற்ப்பட்டுள்ள கொரோனா பெருமந்தமும் முதலாளித்துவ அமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் நேரடியாக வெகுமக்களை தாக்கி வாழ்வாதாரங்களை பொருளாதாரத்தை சீரழித்து மேலும் சீரழித்து முதலாளித்துவ அமைப்பை மேலும் வலுப்படுத்த வழி ஏற்படுத்தப்போகிறது.
இந்த மனித வாழ்வியலை பொருத்தவரை பஞ்சம், கொரோனா, போர் ஆகியன குறித்து அச்சுறுத்தல் ஒரு வழியாக நீக்கப்பட்டால்.. மருத்துவ அறிவியலாளர்கள், கார்ப்பரேட் பெரும் முதலீட்டார்கள், வங்கியாளர்கள் நிலமை என்னாவது ஆகையால், சமூக சமத்துவம் ஏற்படாதவரை காலம் முழுக்க முதலாளித்துவ அமைப்புகளால் இப்படிப்பட்ட பெருமந்தம் உருவாகும் அல்லது உருவாக்கப்படும்.
Post a Comment