சுயமரியாதைக்காரன்:- மாட்டுச் சாணியை உருட்டி கொழுக்கட்டை போல் ஆக்கி சாமியாக வைத்துக் கும்பிடுகிறார்களே, இதன் காரணம் என்ன? அந்தச் சாணி நாற்றம் அடிப்பதில்லை என்கிற காரணம் தானே?
பார்ப்பான் :- ஓய், உமக்கென்னங்காணும் தெரியும்? பசுஞ்சாணியில் ஜர்ம்ஸ் (பூச்சி)களைக் கொல்லும் சக்தி இருக்கிறது ஓய்.
சுயமரியாதைக்காரன்:- எந்த டாக்டர் சொன்னார் உமக்கு? அல்லது இந்த தகவல் எதிலிருக்கிறது?
பார்ப்பான் :- ஓய், ஓய், இந்தக் காலத்து டாக்டர்களை எல்லாம் விட, இந்த காலத்து சயின்ஸ் புத்தகங்களை எல்லாம் விட, அந்த காலத்து பெரியவாளும், சாஸ்திரங்களும் எவ்வளவு மேலானது தெரியுமா? இதற்கெல்லாம் ஆதாரம் கேட்காதேயும், இப்படி கேட்டவா வெகு பேருக்கு வாய் புழுத்துப் போய்விட்டது.
சுயமரியாதைக்காரன்:- ஓ!ஓ! அப்படியா? பகுத்தறிவில்லாத மாட்டுச் சாணிக்கே ஜர்ம்ஸ்(கிருமி)ஐ கொல்லுகிற சக்தி இருந்தால் அதைவிட உயர்ந்த பிறவியான பகுத்தறிவுள்ள மனுஷன் சாணிக்கு இன்னும் என்ன என்னமோ சக்தி இருக்கலாமே; பின் அதை.....
பார்ப்பான் :- சீச்சீ, நீர் என்ன? சுயமரியாதைக்காரராக்கும். உம்மிடம் யார் பேசுவார்?
(குடியரசு கற்பனை உரையாடல் - 20.11.1943)
Post a Comment