பெற்றோம், மற்றோர் வெற்றி!
- ஊரும் உணர்வும்
இந்தத் தலைப்பு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற தி.மு.க. அரசின் உத்தரவைக் கொண்டாடப் பொருத்தமாக இருந்தாலும் இந்தத் தலைப்பு அதற்காக வைக்கப்படவில்லை.
1941, மார்ச் 20 அன்று ‘விடுதலை’ ஏட்டில் இதே
தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது.
அந்தக் கட்டுரை,
‘ஆரிய ஜாதித் திமிரைஎன்று தொடங்கியது.நிலைநாட்டவும், திராவிடரின் தன்மானத்தைப் பறிக்கவும், ஆரியர், திராவிட நாட்டில் ஜாதி பேதத்தைப் புகுத்தி தமது உயர்வை ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டு நம்மவரை 'சூத்திரர்_என்று இழித்துப் பழித்துப் பேசி வந்த கொடுமையை ஒழிப்பதையே பிறவியின் பயன், காலத்துக்கேற்ற காரியம், கடமை என்று இருந்தே பெரியார் ராமசாமி அவர்கள் தமிழரைத் தட்டி எழுப்பி போர்க்கோலம் பூணச் செய்தார். தமிழர்கள் எங்கும் தயாராக இருந்தனர்’
1970களில் சாதி பேதமில்லாமல் அனைவரையும் அர்ச்சகர் ஆக்குவதற்கு கிளர்ச்சியைத் தொடங்கப் போகிறேன் என்றார் தந்தை பெரியார். கிளர்ச்சி வேண்டாம் சட்டப்படி அர்ச்சகர் ஆக்கலாம் என்று சட்டமியற்றினார் அன்றைய முதல்வர் கலைஞர். 1940களிலும் ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்தார் பெரியார்.
அது எதற்கென்றால்,
ஆரிய ஜாதி பேதக் கொடுமை, கோவிலிலே, குளத்திலே, வீதியிலே, வீடுகளிலே இருப்பது ரயில்வே ஓட்டல்களிலும் இருந்து வந்தது. நாம் தாழ்ந்தவர்; ஆரியர் உயர்ந்தவர். அவர்கள் ஆள்வோர்; நாம் அடிமை என்று இழித்துக் கூறுவது போல ரயில்வே உணவகத்தில் பார்ப்பனருக்கு தனி இடமும், நம்மவருக்கு அதாவது பார்ப்பனரல்லாதோர்க்கு வேறு இடமும் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒருசில சூத்திர பார்ப்பன அடிமைகள் நமக்கென்ன என்று இருந்துவிட்டனர். தமிழர் தலைவர் தந்தை பெரியார் இதைக் கண்டு வெகுண்டு எழுந்து, நம்மவர் பணத்தை நம்பி வாழும் ரயில்வேக்காரர் நம்மவரை இழிவு செய்யும் ஆரிய முறைக்கு ஆதரவு தருவது கண்டு பேதமையை ஒழிக்க ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். நிர்வாகத்தால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
பார்ப்பனரல்லாதோர் கட்டிய கோயில்களில் பார்ப்பனரல்லாதோர் கொடுக்கும் காணிக்கையை நம்பி வாழும் புரோகிதர் கூட்டம் பார்ப்பனரல்லாதோரை பூசை செய்யத் தடுத்ததோடு, ஆகமம் என்ற தடுப்பு மூலம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகத் தடையை ஏற்படுத்தி வைத்திருந்தது போல ரயில் நிலைய உணவகங்களிலும் பார்ப்பானுக்குத் தனி இடம், அங்கு பிறர் வரக்கூடாது என்பதைச்
சடங்காகக் கடைப்பிடித்தது.
பார்ப்பனர்கள் அரையடி குடுமியும், ஒன்றரை
மீட்டர் பூநூலும், தர்ப்பைப் புல்லும் வைத்துக் கொண்டு வெள்ளைக்காரன் கண்டுபிடித்த ரயிலையும் இந்தியா முழுக்க இரயில்
துறை நிர்வகித்த அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துகொண்டான் என்றால், அவனின் சதிவலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அறிந்து கொண்டார் பெரியார்.
இனி தீர்மானம் போட்டு பயனில்லை. கிளர்ச்சி ஏற்படுத்த வேண்டும். அதற்கு யார் யாரெல்லாம் வருகிறார்கள் என்று கும்பகோணம் அருகே நடந்த தாராசுரம் மாநாட்டில் பெரியார் கோரிக்கை வைத்த போது அங்கேயே 200 வாலிபர்கள் கையொப்பமிட்டு இதற்காகச் சிறை செல்லவும் தயார் என்றார்கள்.
அர்ச்சகர் சட்டத்திற்கான அரை நூற்றாண்டுக் கால போராட்டம் முழுக்க நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டு, சட்டத்தின்படி செயல்படுத்தப்பட்டது. ஆனால் இரயில்வே உணவகம் போராட்டத்திற்கு பெரியார் சட்டத்தை நாடவில்லை, தன் தொண்டர்களை நாடினார். அது தமிழகம் முழுக்க ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் அன்றைய மதராஸ் சர்க்கார் பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில் உணவகம் சம்பந்தமாக இந்தியச் சர்க்காருக்கு எழுதியிருப்பதாகக் கூறியிருந்தது.
இந்த நிலையில் தான் 08.2.1941
அன்று எம்.எஸ்.எம் (Madras and Southern Railway) ரயில்வே உணவகத்தில் சாதி வேறுபாட்டுடன் அமர்ந்து உணவருந்தும் முறை ஒழிக்கப்பட்டாலும் தென்னிந்தியாவின் மிக முக்கிய ரயில்வே துறையான சவுத் இந்தியன் ரயில்வே ஓட்டல்களில் சாதிப்
பாகுபாடு தொடர்ந்தது.
1924இல் கோவை சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் ரயில்வே உணவகங்கள்சாதி பேதம் பார்க்கக் கூடாது என்று ரயில்வே ஆலோசனைக் கமிட்டியில் தீர்மானம் கொண்டு வந்தபோது அதை காளிதாச (அய்யர்) என்ற ஒரு பார்ப்பான் வஞ்சகம் செய்து கெடுத்தார்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்தினசபாபதி கோரிக்கை பெரியாரால் ஓரளவு நிறை வேற்றப்பட்டது.
இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் அர்ச்சகர் சட்டம் அமல்படுத்தப்பட்ட போது பார்ப்பனர்கள் சிவாச்சாரியார் என்ற பெயரில் நீலிக்கண்ணீரோடு எப்படி ஒப்பாரி வைத்தார்களோ அதே போன்று ரயில்வே ஓட்டல்களில் சாதிப் பாகுபாடு இனி கிடையாது என்று சர்க்கார் அறிவித்தபோது பக்தகோடிகள் மனம் புண்ணாகும், ரயில்வேக்கு வருமானம் குறையுமென்று பார்ப்பனர்கள் பரப்பினார்கள். ஆனால் சர்க்கார் 20.3.1941 அன்று சவுத் இந்தியன் ரயில்வே உணவகங்களிலும் சாப்பிட சாதிப் பாகுபாடு நீக்கியபோது பெரியாரின் போராட்டத்திற்கு மிகப் பெரிய வெற்றி கிட்டியது.
மானம்,அறிவோடு சுயமரியாதையுடன் வாழ்வதற்கு முதலில் ஒழிக்க வேண்டியது இந்த மாதிரி ஏற்றத்தாழ்வு நிலை என்பதை நன்கறிந்த பெரியார், ‘வெற்றிக் கொண்டாட்டம்’ என்ற தலைப்பில்
‘பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதோருக்கும் உணவருந்த வேறு வேறாக இடம் ஒதுக்கி வைத்து வெகுகாலமாகப் பார்ப்பனரல்லாதோர் இழிவுபடுத்தி வந்த முறை 20.3.1941அன்றோடு ஒழிந்து விட்டதால்,.தமிழ் மக்கள் ஒரு வெற்றிக் கொண்டாட்டத்தைக் கொண்டாடக் கடமை பட்டிருக்கிறார்கள். ஆதலால் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை 'ரயில்வே ஓட்டல் இழிவு ஒழிந்த கொண்டாட்டம்' என்பதாக30.3.1941 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ் மக்கள் யாவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'
என்றார்.
சாதி தோன்றியது முதல் சமத்துவம் சமபந்தி என்பது இச்சமூகத்தில் மறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, சனாதன அசமத்துவ நடைமுறையே நீடித்து அதை கருத்து யுத்தம் மூலம் பெரியார் தகர்த்ததோடு விடுதலை நாளேட்டில் வெற்றிக் கொண்டாட்டம் பற்றிய பெரியாரின் வேண்டுகோள் தினந்தோறும் செய்தியாக வந்ததோடு இதை ஓர் திருவிழாவாகக் கொண்டாட பெரியார் அழைப்பு விடுத்தார்.
பெரியாரின் சுயமரியாதை வாழ்வியலில்
அனைவரையும் அர்ச்சகராக்கும் சட்ட ஆணை என்பது பார்ப்பனரல்லாதோர்க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி! அதை இந்த ஆண்டு முழுக்க பார்ப்பனரல்லாதோர் கொண்டாட வேண்டும்!,
அது ஏதோ திராவிட இயக்கத்தவருக்கு மட்டும் கிடைத்த வெற்றியாகக் கருதி விடக்கூடாது.
இந்த வெற்றிக்குக் காரணம் நம் வீர வாலிபர்களுக்கு உரியதாகும் என்பதை உண்மையாகவும், மனப்பூர்வமாகவும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் பெரியார்!
விடுதலை நாளேடோ:
வெற்றி! வெற்றி!
ஆரியத் திமிர் அடங்கிற்று
பெரியார் பெருவெற்றி அடைந்தார்.
தமிழர் சம உரிமைப் போரில்"
மற்றொரு வெற்றி பெற்றனர் வெற்றி விழா கொண்டாடுக
என்றது.
ஆம் அர்ச்சகர் சட்டம் என்பது ஏதோ சாதாரண வெற்றி அல்ல, அசாதாரண வெற்றி. ஆரியர் திமிரை அடக்கி சம உரிமையும் சமய உரிமையும் நிலைநாட்டிய வெற்றியைக் கொண்டாடி, திராவிட அரசியலைப் போற்றுவோம்.
வெங்காயம் செப்டம்பர் 2021
Post a Comment